எங்க சட்டத்தை நீங்க மதிக்கல…! உங்க சட்டத்தை நான் ஏன் மதிக்கணும்… பிஜேபி அரசை கேட்க துணிச்சல் இருக்கா ?


செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கனிமொழி எதை தட்டி கேட்டுள்ளார்கள், நாங்கள் வந்தால் நீட்டை ரத்து செய்து விடுவோம், அதற்கு எங்களிடம் திட்டம் இருக்கிறது, எங்களுக்கெல்லாம் வேறு யோசனை இருக்கிறது என்று கனிமொழியும் பேசினார்கள், திரு ஸ்டாலின் அவர்களும் பேசினார்கள், உதயநிதியும் பேசினார்கள். அப்பறம்  இன்னும் ஏன் நீட் இருக்கிறது. எந்த தீர்மானத்தை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுள்ளது ?

நீட்டிற்கு இவர்கள்தான் தீர்மானம் போட்டார்களா ? எடப்பாடி பழனிச்சாமி கூட போட்டார்கள் ஏற்றார்களா? உங்களால் சண்டை போட துணிவு இருக்கா? ஆனா நான் போடுவேன்.நீங்கள் போட்டு அனுப்புற சட்டத்தை நாங்கள் ஏற்க வேண்டுமா? எட்டு கோடி மக்களின் பிரதிநிதித்துவத்தை பெற்ற அரசு நான் போட்ட சட்டத்தை நீ மதிக்கவில்லை என்றால், உங்கள் சட்டத்தை நான் ஏன் மதிக்க வேண்டும் என்று கேட்பதற்கு துணிவு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

மின் மசோதாவை தடுப்பதற்கு துணிவு இருக்கிறதா? அது ஓபிஎஸ் உதயம் மின் திட்டத்தில் போட்ட கையெழுத்து, அவர் போட்டாரு.  நீங்கள் தடுத்து போராட முடியாதா ? கல்குவாரியை தடுக்க முடியாதா ? எத்தனை ஆண்டுகளாக…. ? 2009 இல் தொடங்கியது,  2019-ல் ஆரம்பித்தார். 2007 தொடங்கப்பட்ட தேவிபட்டணம் துறைமுகம், 2019 ஐயா எடப்பாடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டது, அதை பார்வையிட்டு முறையாக கட்டப்பட்டுள்ளதா? ஏதாவது ஆய்வு நடந்து இருக்கிறதா?

தட்டி கேட்போம், தட்டி கேட்போம் என்று சொல்கிறார்கள் எதை எதிர்த்து பேசுகிறீர்கள். இந்த 11 பேரை விடுதலை செய்திருக்கிறார்கள்…  சுதந்திர கொடியை பிடிங்க என்று சொல்லி, அதே நாளில் 11 பேரை விடுதலை செய்திருக்கிறார்கள் அதை எதிர்த்து பேசி உள்ளீர்களா? ஒரே அரசியல் இயக்கம் நாங்கள் தான் எதிர்த்து பேசி இருக்கிறோம், நாங்கள் தான் அறிக்கை கொடுத்திருக்கிறோம். ஏன் பேசவில்லை? அந்த செயல் ஏற்புடையதா? சும்மா பேசுவது தான்  நாங்கள் தான் செய்தோம், நாங்க தான் செய்தோம் என்று…  வேடிக்கையாக இருக்கிறது என விமர்சித்தார்.

The post எங்க சட்டத்தை நீங்க மதிக்கல…! உங்க சட்டத்தை நான் ஏன் மதிக்கணும்… பிஜேபி அரசை கேட்க துணிச்சல் இருக்கா ? appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.