சேலம் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டம் மூலம் கார்ப்ஸ் ஆப் மிலிடெரி போலீஸ் பிரிவில் பொதுப்பணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அதற்கான ஆள் எடுப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேலூர் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் www.jionindiamarmy.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.அதில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்கலாம்.
The post அக்னிபத் திட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!! appeared first on Seithi Solai.