மீனம் ராசிக்கு…! வாய்ப்புகள் கிடைக்கும்..! குழப்பங்கள் தீரும்..!!


மீனம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்ப உறுப்பினர்கள் அதிகபாசம் கொள்வார்கள்.

தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். உடல் ஆரோக்கியம் பலத்தை கொடுக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெகு நாட்களாக தடைபெற்ற காரியமும் நடந்து முடியும். செலவுகள் மட்டும் கட்டுக்கடங்காமல் இருக்கும். சாதகமான பலன் ஓரளவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மனதில் மட்டும் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்லுங்கள், ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் இருக்கட்டும். முன்கோபம் ஏற்பட்டு சில வீண் தகராறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானமாக செயல்பட்டால் மிகவும் நல்லது. யாரைப் பற்றியும் விமர்சனம் வேண்டாம், பஞ்சாயத்தில் கலந்துகொண்டு அறிவுரைகளும் கூறவேண்டாம்.

காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் நிதானமான போக்கையே கடைப்பிடிப்பீர்கள். கணவன் மனைவி இருவருக்குமிடையில் பேச்சில் நிதானம் வெளிப்பட்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முடிந்தால் குலதெய்வத்தை மனதார வழிபட்டு முன்னேற்றமான சூழ்நிலையை அனுபவித்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும், அப்படியே அம்மன் வழிபாட்டை மனதார நினைத்து வழிபட்டு எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுங்கள்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

The post மீனம் ராசிக்கு…! வாய்ப்புகள் கிடைக்கும்..! குழப்பங்கள் தீரும்..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.