அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில், பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என கூறப்படும் நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவை செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் எடப்பாடிக்கு வழங்கப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாது. அதே நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே பொதுக்குழு நடத்தலாம் என்றும் அதில் ஓபிஎஸ் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுகவில் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கி அமர்வு முன் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தார். அதன்படி இன்று இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Post Views:
0