இந்த 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர்….!!!!


கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 19 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும்  சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் சேத்துப்பட்டு தாலுகாவில் மட்டும் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் ஐமாபந்தி முடிந்து 2  ஆண்டுகள் ஆகியும் அதற்கான படி  வழங்கவில்லை. எனவே படி வழங்க வேண்டும்  உள்ளிட்ட 7  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம்  நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர் ஜான்சன் மற்றும்  44-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.