ADMKவில் அடிதடி சண்டை இல்லை…! TTV பேச்சை முழுசா ஏற்கிறார்கள்… ஓபிஎஸ் டீம் போடும் புதுக்கணக்கு ..!!


அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது,  அதிமுகவில் நடப்பது அடிதடி சண்டை இல்ல…  2 பேர் போட்டி போடுவதற்கு.. உறுப்பினர்கள் என்பவர்கள் கீழ் மட்டத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள்தான், உண்மையான கட்சிக்காரர்கள். அவர்கள் சொல்லட்டும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

அன்றைக்கு நடந்த சம்பவம் என்னவென்றால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கட்டும் என்று முடிவு செய்த பிறகு, இருவரும் சேர்ந்து மனு கொடுக்கிறார்கள். இதில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளராக போட்டி போடுகின்றோம் என்று அப்போது யாரும் எதிர்த்து போட்டி போடவில்லை, அதனால் அவர்களை ஏற்றுக் கொள்கிறோம் அதுதான் உண்மையான நிலைமை.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம், மற்ற பேச்சுக்கெல்லாம் இப்போது இடமில்லை, இணைவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.பிரச்சனை என்னவென்று எடப்பாடியிடம்  தான் கேட்க வேண்டும், தினகரனிடமும் சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும்.

எடப்பாடி தற்போது சொல்லிவிட்டார் நாங்கள் இணைவதற்கு தயாராக இல்லை என்று…. ஆனால் டிடிவி தினகரன் இணைவதற்கு தயார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அதைத்தான் தொண்டர்கள் முழுசாக ஏற்றுக் கொள்கிறார்கள் என தெரிவித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.