“எங்களை மிரட்டுகின்றனர்” சகோதரியுடன் தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்…!!


மாற்றுத்திறனாளி தனது சகோதரியுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள தேக்கல்வாடி கிராமத்தில் மாற்றுத்திறனாளியான மணிகண்டன் (25) என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு ரம்யா(40) என்ற சகோதரி உள்ளார். இருவரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மணிகண்டன் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமாக 1 ஏக்கர் 37 சென்ட் நிலத்தை உறவினர்கள் சிலர் அபகரிக்க முயற்சி செய்கின்றனர்.

இதனை தட்டி கேட்ட போது, கொலை செய்து விடுவதாக அவர்கள் எங்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாற்றுத்திறனாளியாக இருக்கும்  நான் அந்த நிலத்தை வைத்து தான் வாழ்கிறேன். எனவே நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மணிகண்டன் கூறினார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.