மாற்றுத்திறனாளிகள் மனநலம் குன்றியோரை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற மனநல பாதிக்கப்பட்ட பெண்டிங் ஜான் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நித்திரவிளை காவல்நிலையத்திற்கு 2014 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய சில நாட்களில் மரணமடைந்துள்ளார். இந்த மரணத்திற்கு காவல்துறை தான் காரணம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடு தர வேண்டும் என்று அவரது மனைவி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், தற்போது உயிரிழந்த குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்கும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோரை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவராக கருதி நடத்தப்பட்டால் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் எண்ணிக்கை குறையும். எனவே இந்த நிலை மாற வேண்டும். காவல்துறையினர் பலத்தையும், அதிகாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நபர்களாகவும், தேவையற்றவர்களாகவும் பொதுமக்களால் பார்க்கப்படுவதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
Post Views:
0