சிறுமியை ஏமாற்றிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி ஒருவரை மில் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை ஆறுமுகம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஆறுமுகம் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து பெற்றோர் அந்த சிறுமியை பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்த ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Post Views:
0