திமுகவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ? கொங்கு மண்டலத்தில் பரபரப்பு…!!


பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கோயம்புத்தூர் சென்று இருக்கக்கூடிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இணை உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 2பேர் இன்று திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாக சொல்லப்படுகின்றது. 10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்திருக்கக்கூடிய திமுகவிற்கு தென்மண்டலம் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் கொங்கு மண்டலத்தில் திமுக சரிவையே கண்டுள்ளது.

64  சட்டமன்ற உறுப்பினர்களோடு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக இருக்கின்றது. குறிப்பாக கோவையில் இருக்கக்கூடிய 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.