வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கிய பெண்…. மோசடி செய்த நபர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!


சென்னை முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில் வசித்து வருபவர் தம்பி. இவருக்கு ஹன்னா நேசமணி (59) என்ற மனைவி இருக்கிறார். இதில் ஹன்னா நேசமணிக்கு கணவரின் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச்செலவுக்காக பணம் தேவைப்பட்டது. இந்நிலையில் ஹன்னா நேசமணிக்கு உறவினர் ஒருவரின் வாயிலாக ரியல் எஸ்டேட் புரோக்கர் சுந்தரசாமி (50) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து சுந்தரசாமி வீட்டு பத்திரத்தின் பேரில் கடன் தருவதாக ஹன்னா நேசமணியிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் தன் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து சுந்தரசாமியிடம் கொடுத்து ரூபாய்.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.

அதன்பின் கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையை ஹன்னா நேசமணி செலுத்தியும், சுந்தரசாமி வீட்டு பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து ஹன்னா நேசமணி இது தொடர்பாக விசாரித்தார். அதில் சுந்தரசாமி, ஹன்னா நேசமணியின் வீட்டு பத்திரத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் புரோக்கர் சுந்தரசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.