செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, கட்சிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் 2667 பேர் தான் இதயம் என்று அவர் சொல்கிறார், பிறகு ஒன்றை கோடி பேர் யார் ? இதை நான் தான் கிளறுகிறேன். ஒன்றை கோடி பேர் என்று அம்மா சொன்னார்கள், 15 லட்சம் இருந்தது தலைவர் இருந்த காலத்தில், அதன்பிறகு ஒன்றரை கோடி ஆக மாறியது.
அதற்கு பின்னால் நான்கு வருடம் முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறீர்களே, கட்சியில் எல்லா பொறுப்புகளையும் எடுத்தீர்கள், 1.50 என்பது 1.60 ஆக மாறி இருக்க வேண்டும் அல்லது ஒரு லட்சம் பேரை கட்சியை விட்டு எடுத்து விட்டீர்கள் 1.49 ஆக வேண்டும். அது என்னயா எப்போ பார்த்தாலும் 1.50, 1.50 ஒன்றரை கோடி என்று சொல்கிறீர்கள், அது ஏறவும் இறங்கவும் செய்யாதா? இந்த பட்டியல் எங்கே? விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பிறகு அலுவலகத்தில் இருந்து எல்லா டாக்குமெண்டையும் தூக்கிக் கொண்டு சென்று விட்டார்கள், அது எங்க அப்பா வீட்டு டாக்குமெண்ட்டா அல்லது உங்க அப்பாவுடைய டாக்குமெண்ட்டா. கட்சியினுடைய டாக்குமென்ட்களை அங்கு யாரு வைத்துக் கொண்டு இருந்தார். இணைந்து செயல்பட வாருங்கள் என்று பேரறிஞர் அண்ணா வழியில்…
தம்பி வா தலைமை ஏற்க வா என்று சொல்லி நாவலர் கூப்பிட்ட மாதிரி, எப்படியோ நல்ல மனதோடு கூப்பிட்டார், நானும் சிரித்துக்கொண்டே தான் இருக்கிறேன். அந்த தலைவன் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இப்போது மதுரையில் பார்த்தால் உதயகுமார் பயல்வான் இருக்கிறார். அவருடைய பகுதியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக தொண்டர்கள் வரவேற்று இருக்கிறார்கள். நாடு முழுவதும் அப்படி ஒரு செய்தியை இருக்கிறது.
ஏனென்றால் கட்சி கொடியை ஏந்திய தொண்டர்களுக்கு தான் தெரியும், கண்ணில் ரத்தம் தான் வருகிறது. இந்த கட்சி உடைய உடைய யாருக்காக லாபம், அதை திமுகவை விரும்பவில்லை. தேசிய கட்சி உள்ளே வந்து விடும் என்று நினைக்கிறார்கள். 55 ஆண்டு காலமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், கலைஞரும், அம்மாவும் மாறி மாறி ஆண்டார்கள் என்பது தான் வரலாறு, அதற்கே ஆப்பு வைக்கிறீர்கள் என விமர்சித்தார்.
Post Views:
0