ஆடிக்கு ஒரு பஸ் வருது… அம்மாவாசைக்கு ஒரு பஸ் வருது… DMK TVபார்த்தா ரூ.10,000 கொடுக்கும் ?


செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, பெயருக்கு மகளிர்க்கு இலவசம் கொடுக்கிறேன் என்று ரெண்டு பஸ்சுக்கு மட்டும் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி முன்னாடி இரண்டு பெயிண்ட் அடிச்சுவிட்டுட்டு, அந்த ரெண்டு பஸ்ஸு எப்ப வருதுன்னு தெரியாது ? ஆடிக்கு ஒரு பஸ் வருது,  அம்மாவாசைக்கு ஒரு பஸ்  வருது. காங்கிரஸ் அரசு அறிவித்திருக்கிறார்கள்.

தேர்தல் தேர்தல் வரப்போகிறது. ராஜஸ்தானில் இருக்கக்கூடிய அனைத்து இல்லத்தரசிகளுக்கு ஒரு செல்போன் இலவசம். அந்த செல்போன்ல வர்ற டேட்டா இலவசம் செல்போன்ல ஆரம்பிச்சு தமிழ்நாட்டுக்கு அடுத்து பாத்தீங்கன்னா டிவி எல்லாம் தாண்டி, இன்டர்நெட் எல்லாம் தாண்டி,  அடுத்தடுத்த லெவலுக்கு அதை கொண்டு போகும்போது,  ஜனநாயகம் என்பதே  கேலிக்கூத்து ஆகிறது.

அதனால் தயவுசெய்து இலவசத்தையும்,  அரசின் கடமையும் நாம்  குழப்பிக்கொள்ள வேண்டாம். திரும்ப தமிழ்நாட்டில திமுக 2026 தேர்தல் அறிக்கையில்,  நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்….  நீங்க வீட்டிலேயே சும்மா உக்காந்து டிவி பாத்துட்டு இருங்க, பத்தாயிரம் பத்தாயிரம் ரூபாய் முதல் நாள் நாங்க அக்கவுண்டுக்கு போட்டுவிடுறோம் என்று சொன்னால், நீங்க என்னனு சொல்லுவீங்க ? அரசின் கடமை என சொல்லுவீங்களா ? இல்லை எலக்சன்ல ஜெயிக்கிறதுக்காக இலவசம் என சொல்றீங்களா ?

பெண்களுக்கு 2.25 கோடி ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்றால்,  மாதம் 2250 கோடி. வருஷத்துக்கு 28,000 கோடி… ஒரு உதாரணத்துக்கு இந்த எண்ணிக்கையை  சொல்கிறேன். அஞ்சு வருஷத்துக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி.  தமிழ்நாட்டினுடைய பட்ஜெட்டே  3 லட்சம் கோடி தான். இது இம்பாசிபிள்,  செய்யவே முடியாது.

ஸ்கூல் எஜுகேஷனுக்கு பணம் கொடுத்துட்டேன், லாண்ட் ஆர்டருக்கு பணம் போயிடுச்சு,  ஹெல்த்துக்கு அருமையா பணம் இருக்கு. எல்லாத்துக்கும் பணம் போய் எங்களுக்கு ஒரு லட்சம் கோடி பட்ஜெட்ல கூடுதலாக இருக்குன்னா…  நீங்க என்னவேனுமோ குடுங்க என தெரிவித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.