நடிகை திரிஷா விரைவில் அரசியலில் இணைய உள்ளதாகவும்,இதற்காக தேசிய கட்சி ஒன்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியது. தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்புள் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷாவிரைவில் ஒரு பெரிய தேசிய கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது பாஜகவா அல்லது காங்கிரஸா என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் அரசியலில் நுழையும் எண்ணமே இல்லை என்று நடிகை திரிஷா முதன் முறையாக தன்னை பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நான் கட்சியில் இணைய போகிறேன் என்ற செய்தியை எப்படி வந்தது என்றே தெரியவில்லை. கொஞ்சம் கூட இது உண்மை இல்லை. எனக்கு அரசியலில் சேரும் நினைப்பு கொஞ்சம் கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
Post Views:
0