சரக்கு கிடைக்குமா பாஸ்?…. எனக்கும் ஆசை தான் ஆனா…. இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிக்கை….!!!!


இன்றைய காலகட்டத்தில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் வித்தியாசமான முறையில் தான் நடைபெறுகிறது. அதிலும் ஒரு சில திருமணங்களில் திருமணத்திற்கு முன்னதாகவே மணமக்கள் ஒருவருக்கொருவர் சில நிபந்தனைகளை விதித்து கொண்டு கையெழுத்திடுகிறார்கள். இதற்கு ஒரு படி மேலே சென்று விதவிதமான பத்திரிகைகளையும் அச்சிட தொடங்கிவிட்டனர்.

அவ்வகையில்,கள்ளக்குறிச்சி வக்கனந்தல் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரின் திருமண பத்திரிக்கை தான் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், எனக்கு கல்யாணம், கண்டிப்பா வரணும். கறி சோறு போடணும்னு ஆசைதான், ஆனால் வெஜ் மட்டும் தான். நீங்க கிப்டாக நகை மற்றும் காசு பணம் எது கொடுத்தாலும் ஓகே. திருமணத்திற்கு சரக்கு உண்டா என்றால் அது கிடையாது. குடி குடியை கெடுக்கும். கல்யாண வீட்டில் பஞ்சாயத்தை உண்டாக்கும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். அந்த திருமண பத்திரிகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.