மத்திய அரசு சார்பாக ரிசர்வ் வங்கி விற்பனை செய்யும் தங்க பத்திரத்தின் நடப்பண்டிற்கான இரண்டாம் தொகுப்பு நேற்று முதல் தொடங்கியது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும். இந்த முறை தங்க பத்திரங்களின் விலை கிராமிற்கு 5197 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தினுடைய மதிப்பும் உயரும். தங்கப் பத்திரத்திற்கு ஜிஎஸ்டி கிடையாது. மேலும் வருடத்திற்கு 2.5% வட்டியும் வருமானமும் கிடைக்கும். செய்கூலி சேதாரம் போன்ற கூடுதல் செலவுகளும் கிடையாது. இந்த தங்க பத்திரங்களை வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.
தங்க நகை வைத்து கடன் வாங்குவது போல தங்க பத்திரத்தையும் வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் தங்க பத்திரத்தை வைத்து கடன் வாங்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி தங்கப்பத்திரத்திற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாயும் கடன் வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் வரையும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஐம்பதாயிரம் முதல் 25 லட்சம் வரையும் கடன் வழங்குகிறது.
Post Views:
0