பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்…. 5 மணி நேரத்திற்கு மேல் வகுப்பறையில் அடைத்து…. ஆசிரியர்கள் செய்த கொடுமை….!!!!


ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரி என்ற நகரில் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது.அப்பல்லியில் பயிலும் 34 மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் அவர்களை நேற்று முன்தினம் ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேல் அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர், கழிவறை செல்லக் கூட அனுமதிக்கவில்லை.பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் தெரிவித்த நிர்வாகிகள் அவர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கவும் அனுமதி மறுத்து விட்டனர்.

பின்னர் 5 மணி நேரம் கழித்து கட்டணம் செலுத்தாதது குறித்த நோட்டீசை மாணவர்களுக்கு வழங்கி அதனை பெற்றோரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர்.இது தொடர்பாக தகவல் அறிந்து கோபமடைந்த பெற்றோர்கள் நேற்று பெருமளவில் திரண்டு பள்ளி முன்பு அமர்வு தர்மாவில் ஈடுபட்டனர்.அதில் பெற்றோர்களின் ஒருவர் ஏற்கனவே ஆன்லைன் மூலமாக பள்ளி கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும் ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.