மைனா பட பாணியில் …. சேலையை கட்டி 40 பயணிககள் மீட்பு….!!!!


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் பேருந்தில் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளனர். கொடைக்கானலுக்கு சென்ற அவர்கள் இன்று காலை சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது பேருந்தின் ஓட்டுநர் டம் டம் பாறை அருகே பேருந்தை நிறுத்தி வெளியே சென்றுள்ளார். ஆனால், மலை பாதையில் பேருந்தை சரியாக நிறுத்தாததால் பேருந்து பள்ளத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. பள்ளத்தில் தொடர்ந்து சென்ற பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

பயணிகளின் கூச்சல் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் மைனா பட பாணியில், பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து அதன் வழியாக சேலையை கட்டி உள்ளிருந்த 40 பயணிகளையும் மீட்டனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.