கும்பம் ராசிக்கு…! கவலைகள் தீரும்..! நிதானம் தேவை..!!


கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும்.

பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். இன்று சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. மனதில் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். நல்லது மற்றும் கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் ஏற்படும்.

தேவையில்லாத விஷயங்களில் குழம்பி விடுவீர்கள். வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் கருத்து தெரிவிக்க வேண்டாம். பஞ்சாயத்துக்களில் தலையிட வேண்டாம். கோபத்தை தவிர்க்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். காதலிலுள்ளவர்கள் நிதானமானப்போக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் விளையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஊதா நிறம்.

The post கும்பம் ராசிக்கு…! கவலைகள் தீரும்..! நிதானம் தேவை..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.