“அவர் கிட்ட சேர்த்து விட சொன்னாரு” ஆனா பாவம் என்கிட்ட மாட்டிக்கிட்டாரு…. இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி…!!!

நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஷஷீர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபு பேசியதாவது, ரஞ்சித்தை எனக்கு கடந்த 2007-ம் ஆண்டில் இருந்தே தெரியும். அவர் என்னிடம் லிங்குசாமியிடம் தான் துணை இயக்குனராக சேர்த்து விட சொன்னார். ஆனால் பாவம் என்னிடம் மாட்டிக் கொண்டார். எனக்கு ரஞ்சித்தின் படங்களை பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. அவருக்குள் எத்தனை சிந்தனைகள், எத்தனை கற்பனைகள், எத்தனை விஷயங்கள் இருக்கிறது. குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகவே மாறிவிட்டார். நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தின் டிரைலர் ஹாலிவுட் படத்தின் டிரைலர் போல் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.