“எல்லை தாண்டி மீன் பிடிப்பு”…. தமிழக மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை கடற்படை நடவடிக்கை….!!!!


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி நாகப்பட்டினம் மீனவர்கள் 10பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கைதான மீனவர்கள் திரிகோண மலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவ ல்வெளியாகியுள்ளது. இன்றுகாலை நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியில் இருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்தும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும் திரிகோணமலை கப்பற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர். அத்துடன் நாகை மீனவர்கள் 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதேபோன்று சென்ற 6 ஆம் தேதி கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த காமராஜ், பூவரசன், அன்பு, செல்லையன், பாலு, செல்லதுரை ,முருகானந்தம் ,ஸ்டீபன், முருகன் ஆகிய 9 பேரையும் கைதுசெய்து, அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கைப்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு, மாநில அரசும் ,எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.