சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாகிறது…. எதிர்ப்பு சட்டத்தை ரத்து செய்த பிரதமர்…!!!


சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக இருந்த சட்ட பிரிவை ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. எனினும், சமீப வருடங்களாக அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக ஓரினச்சேர்க்கை குறித்த புரிதல் விரிவடைந்து கொண்டிருக்கிறது. எனவே, சில நாடுகள் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்து கொண்டிருக்கின்றன.

அதன்படி, இந்தியா மற்றும் சீனா போன்ற பல ஆசிய நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு  சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்கிறது. இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்,  ஓரினச்சேர்க்கைக்கு எதிரான 337ஏ என்ற சட்டப்பிரிவை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். மேலும், இது குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.