ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அகவிலைப்படி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. 1.7.2022 முதல் கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போன்ற தமிழகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் போன்ற அகில இந்திய பணி அலுவலர்களுக்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் மூன்று சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு அதிகாரிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.