பல்வேறு நடவடிக்கைகள்…. “வாட்ஸ் அப்” எண் அறிமுகம்…. செய்திக்குறிப்பில் வெளியீடு….!!


போதை பொருட்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கார்த்திகேயன் அறிமுகம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதை பொருட்கள் ஒழிப்பது குறித்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இம்மாவட்டம் முழுவதும் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்க 9159616263 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே பொதுமக்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தலாம். இதனை அடுத்து தகவல் தருபவர்களின் ரகசியம் கட்டாயம் காக்கப்படும். இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்காக இம்மாவட்டம் முழுவதும் 12 தனிபடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த எண்ணானது முழுவதுமாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் இயங்கும் என கூறப்பட்டிருந்தது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.