கோவில் உண்டியலில் கை வைத்த வாலிபர்கள்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பரபரப்பு….!!!!


கடலூர் மஞ்சக் குப்பம் செல்வவிநாயகர் கோயிலில் சென்ற 31/07/2022 அன்று மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு இருந்த அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சென்ற 15/08/2022 அன்று இரவு மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோயில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோயில், சப்-ஜெயில் சாலையிலுள்ள வினைதீர்த்த விநாயகர் கோயில் ஆகிய 3 கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்கள் அடுத்தடுத்து உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிசென்றனர். இவ்வாறு கோயில்களை குறி வைத்து மர்மநபர்கள் திருடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் புது நகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல்துறையினர் கோயில்களை குறிவைத்து திருடிய கும்பலை தேடிவந்தனர். இந்த நிலையில் கும்தாமேடு தரைப்பாலம் அருகில் தனிப்படை காவல்துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதன் காரணமாக சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் புதுப்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் பிரவின் குமார் (21), திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தை சேர்ந்த சரவணன் மகன் சக்தி (19) என்பதும், செல்வவிநாயகர் கோயிலில் திருட முயற்சி செய்ததும், நாகம்மன் கோவில் உள்ளிட்ட 3 கோவில்களின் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து பிரவீன்குமார், சக்தி போன்றோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூபாய்.10 ஆயிரம் மற்றும் திருட பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.