அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று இருக்கிறது. இங்கு சென்ற மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையே ஆரோக்கியமாக பிறந்த 5 குழந்தைகள் சில நாட்களிலேயே இறந்துள்ளது. இதனால் குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்று குழந்தைகளின் பெற்றோர் நினைத்ததால் அவர்கள் யாரும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை. இதையடுத்து கடைசியாக உயிரிழந்த குழந்தையின் பாட்டி சென்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைகளின் உடம்பில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து வரும் சூழ்நிலையில் உயிரிழந்த 5 குழந்தைகளில் 2 பேரின் மருத்துவ பதிவுகளை மறு ஆய்வு செய்ததில் அந்த குழந்தைகள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதன்பின் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நர்சு பிரெண்டா அகுவேரோவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் மற்ற 3 குழந்தைகளின் மருத்துவப்பதிவுகள் மறுஆய்வு நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த குழந்தைகளையும் பிரெண்டா அகுவேரோ விஷம் வைத்து கொலை செய்திருப்பார் என நம்பப்படுகிறது. இருப்பினும் மருத்துவ பதிவுகளின் மறு ஆய்வுக்கு பிறகே உண்மை தெரியவரும்.
Post Views:
0