பொன்னியின் செல்வன்…. படத்தில் வரும் இடத்துக்கு நீங்களும் போகலாம்…. ரெடியா இருங்க மக்களே…..!!!!


பொன்னியின் செல்வன் கதையில் வரக்கூடிய இடங்களுக்கு பொதுமக்களை சுற்றுலா அழைத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற பழமையான மிதிவண்டிகளின் கண்காட்சியில் பங்கேற்று பேசிய அவர், வரலாற்று சிறப்புமிக்க பூம்புகாரில் மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சுற்றுலா செல்ல விரும்பும் மக்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் ஒவ்வொரு இடங்களிலும் அதன் சிறப்பை விளக்கும் வகையில் சுற்றுலா வழிகாட்டிகள் உங்களுடன் வருவார்கள்.பொன்னியின் செல்வன் கதையில் வரும் அனைத்து இடங்களையும் பொதுமக்கள் பார்வையிடலாம். எதற்காக சுற்றுலா விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதற்கான விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

The post பொன்னியின் செல்வன்…. படத்தில் வரும் இடத்துக்கு நீங்களும் போகலாம்…. ரெடியா இருங்க மக்களே…..!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.