சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அகஸ்தியர்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்த செல்வின்(33) என்பது தெரியவந்தது.
இவர் சட்டவிரோதமாக அங்கு கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து செல்வினை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவரிடம் இருந்த 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Post Views:
0