வானில் தூக்கி எறியப்பட்ட ரஷ்ய டாங்கி…. உக்ரைன் செயலால் கதிகலங்கிய எதிரிகள்…. பரபரப்பு….!!!!!


உக்ரைன் படை தாக்குதலில் ரஷ்ய நாட்டின் ஒரு டாங்கி வானில் பல அடிக்கு தூக்கிவீசப்படும் காட்சிகளை உக்ரைனின் ஆயுதப் படை பொதுப் பணியாளர்கள் வெளியிட்டு இருக்கின்றனர். உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தாக்குதல் 175 தினங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 30,000-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 12 மில்லியன் மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைபடி 5 மில்லியன் மக்கள் உக்ரைனின் அண்டைநாடுகளுக்கும் 7 மில்லியன் மக்கள் உக்ரைனின் பிறப் பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். உக்ரைன்-ரஷ்யா இடையேயான ராணுவ மோதலை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் தீவரம் காட்டாத சூழ்நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தாக்குதல்கள் தீவரமடைந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் படை நடத்திய தாக்குதலில் ரஷ்யநாட்டின் ஒரு டாங்கி வானில் பலஅடி தூரத்திற்கு தூக்கிவீசப்பட்டு இருப்பது குறித்த வீடியோ காட்சிகளை உக்ரைனின் ஆயுதப்படை பொதுப் பணியாளர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சி இப்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.