சென்னையில் காணத்தக்க அழகிய கடற்கரைகள் மற்றும் கோவில்கள்…. இதோ முழு விவரம்…..!!!!


தமிழகத்தின் தலைநகரான சென்னை, தெற்கே பார்க்க வேண்டிய மிக அழகான நகரங்களில் ஒன்றாகும். இங்கு கண்ணுக்கு இனிய கடற்கரைகள் மற்றும் பழங்கால நகரங்கள் மட்டுமல்லாமல் வினோதமான மலைவாசஸ்தலங்கள்,பிரம்மிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் அமைதியான இடங்கள் ஆகியவற்றால் சென்னை ஆசீர்வதிக்கப்பட்ட திகழ்கிறது.

கடற்கரைகள் சென்னையின் கிழக்கு திசை முழுவதும் பறந்து விரிந்துள்ளன. அதன்படி மெரினா, ஏலியட்ஸ் மற்றும் கோல்டன் கடற்கரை பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாகும். மெரினா கடற்கரை ஆசியாவின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை எனும் சிறப்பை பெற்றுள்ளது. மெரினாவை தொடர்ந்து எலியட்ஸ் கடற்கரை தொடர்ந்து காணப்படுகிறது. இந்த பெயரில் பெரும்பாலானவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பெசன்ட் நகர் பீச் என்றால் குழந்தைகள் கூட வழி காட்டுவார்கள். தங்க கடற்கரை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ளது.ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இது அமைந்துள்ளதாலும் பெரும்பாலும் சோளிங்கநல்லூர் மற்றும் பாலவாக்கம் பகுதியில் இருப்பவர்கள் அல்லது அங்கு பயணிப்பவர்கள் மிக எளிதாக அடையும் தொலைவில் இது இருக்கின்றது. சென்னையின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் பெருங்களத்தூரில் கேளம்பாக்கம் வந்து இந்த கோல்டன் பீச்சை எளிதாக அடையலாம். சென்னையில் சுற்றி பார்க்க இந்த கடற்கரைகள் சிறந்த இடமாகும்.

அடுத்ததாக சென்னையின் கோவில்கள் மிகவும் பழமையானது. அதிலும் வரலாற்று சிறப்புமிக்கது. அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவல்ல முக்கியமான கபாலீஸ்வரர் கோவில். சென்னையின் மிக முக்கிய சிவன் கோவிலாகும். இது திங்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 5.30 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் மாலை ஐந்து மணியிலிருந்து ஒன்பது மணி வரையும் நடை திறந்திருக்கும்.

அதனைப் போலவே ஏகாம்பரேஸ்வரர் கோவில் 1980 களிலேயே கட்டப்பட்ட கோவிலாகும். மேலும் வட பழனி முருகன் கோவில் திருமணம் செய்யவும் திருமண தம்பதிகள் வந்து வழிபடவும் தகுத்த கோவில். அடுத்ததாக அதிர்ஷ்ட லக்ஷ்மி கோவில் ஏலியன்ஸ் கடற்கரையில் அமைந்திருக்கின்றது.சென்னையில் காலத்தக்க கோவில்கள் மற்றும் கடற்கரைகள் இன்றளவும் பெருமையாக பேசப்படுகின்றன.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.