இழப்பீட்டு தொகையாக ரூ.99,000…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!! • Seithi Solai


சென்னை மேற்கு மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூரில் சென்ற 11ஆம் தேதி அமலாக்க அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் 14 மின்சார திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இழப்பீட்டு தொகையாக மின்சார நுகர்வோருக்கு ரூபாய்.10 லட்சத்து 30 ஆயிரத்து 539 விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மின்சார நுகர்வோர்கள், மின்சாரம் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரசத்தொகை ரூபாய்.99 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. அதனை தொடர்ந்து மின்சார திருட்டுகள் குறித்து செயற்பொறியாளரின் 9445857591 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.