நீர்நிலைகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!!


ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெசன்ட் நகர் ஏலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்வுகளை தொடங்கி வைத்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர் நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர் அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் 1055 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிற மாநிலத்தவரும் வியக்கும் வகையில் சென்னையில் அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை தினம் சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.