தமிழகம் முழுவதும் இன்று(21.8.22)…. மக்களே மறக்காம போடுங்க….!!!!


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந் துள்ளன. இந்த நிலையில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடக்கிறது.

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.  முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போடாத 1.50 கோடி பேருக்கு இந்த சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகம் முழுவதும் இன்று(21.8.22)…. மக்களே மறக்காம போடுங்க….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.