காச நோயை ஊசிகள் மூலமாக குணப்படுத்தவும் குறுகிய காலகட்டத்தில் மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்தும் ஆராய்ச்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65 ஆவது வருட நிகழ்ச்சியில் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த மாதத்தில் ஒன்றிய அமைச்சரோடு இங்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவை தாண்டி உலக அளவில் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் சூழல் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது மேலும் முதற்கட்ட காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு மாதத்திற்கு வீட்டிலேயே இருந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலையில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகள் சரியாக உட்கொள்வதில்லை என மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றார்கள். மேலும் குடிப்பழக்கத்தில் இருப்பவர்கள் நோயின் தன்மை சற்று குறைந்தாலே மருந்து உட்கொள்வதை தவிர்த்து விடுகின்றார்கள்.
அப்படி செய்தால் நோய் பாதிப்பு அதிகரிக்கும் 2025 ஆம் வருடத்திற்கு 100% காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் 10.65 கோடி மதிப்பீட்டில் 23 காசநோய் விழிப்புணர்வு வாகனம் தமிழகம் முழுவதும் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக 19000 பேருக்கு காச நோய் பரிசோதனை செய்துள்ளோம். அதேபோல இந்த வருடம் தொடர்ந்து இந்த மருத்துவத் திட்டத்தின் மூலமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. உலகில் 41% பேர் காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். மேலும் தமிழக அரசு கடந்த வருடம் காச நோயை ஒழிக்க 31 கோடியே 32 லட்சம் நிதி வழங்கப்பட்டது இந்த வருடம் அதனை இரட்டிப்பாக அதிகரித்து 68 கோடியே 28 லட்சம் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த வருடம் மட்டும் காச நோயால் பாதிக்கப்பட்ட 80,000 பேரை கண்டறிவதற்கான இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்திய அளவில் 54 சதவீதம் பேரை மட்டும் கண்டறிந்து இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் 72% கண்டறிந்து இருக்கின்றோம். மேலும் காசநோய் காற்றில் பரவும் தன்மை கொண்டிருக்கிறது. தன்னுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் மற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். அதற்கு முன் மேடையில் பேசிய ஐ சி எம் ஆர் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் காச நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது. மேலும் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அவர் விரைவில் காச நோய்க்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் அதே போல் சிக்கன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் சோதனை முறையில் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Post Views:
0