“ஒழுங்காக வேலைக்கு போ” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!


வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரத்தில் சந்துரு(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற சந்துரு தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சந்துருவை குடும்பத்தினர் கண்டித்து ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சந்துரு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சந்துருவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post “ஒழுங்காக வேலைக்கு போ” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.