நீடிக்கும் போர்!… ரஷ்யாவுக்கு டிமிக்கி கொடுத்த சுவிட்சர்லாந்து…. வெளியான தகவல்….!!!!


உக்ரைன் மீது போர் தொடுத்ததை அடுத்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்தது. இந்த  நிலையில் நடுநிலைமை நாடான சுவிட்சர்லாந்து உக்ரைன் பிரச்சினையில் தலையிடாது என்றும்  தொடர்ந்து சுவிட்சர்லாந்துடன் வர்த்தகம் செய்யலாம் என்றும் ரஷ்யா நம்பிக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து சுவிட்சர்லாந்தும் தடைகள் விதிக்கும் என்று ரஷ்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை என ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான முன்னாள் ரஷ்ய தூதரான Boris Bondarev கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்ற மேமாதம் தன் தூதர் பதவியை ராஜினாமா செய்த Boris Bondarev, இப்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.

உக்ரைன் போர் நீடித்துக்கொண்டே செல்வதைக் கண்டு மேற்கத்திய நாடுகள் சலித்துப் போகும் வரை காத்திருப்பதுதான் ரஷ்யாவின் யுக்தி என் Boris Bondarev கூறினார். அவ்வாறு நடக்காததால் இந்த குளிர்காலத்தில் ஐரோப்பிய மக்களை குளிரில் உறையச் செய்வதை உறுதிசெய்துகொள்ள ரஷ்யா விரும்புகிறது என்கிறார். இந்த போரால் நாம் எதற்காக சிரமப்பட வேண்டும் என்ற நிலையை அடையும் மக்கள், அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து உக்ரைனை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திக்கும் நிலை உருவாகவேண்டும் என ரஷ்யா காத்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார். இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து சுவிட்சர்லாந்து ரஷ்யாவின் மீது தடைகளை விதித்தது. இதனால் இப்போது சுவிட்சர்லாந்தை நட்பு நாடு அல்லாத நாடு என வகைப்படுத்தியுள்ளதுடன், ரஷ்ய தூதரகம் அந்நாட்டைக் குறித்து எதிர்மறையான ட்விட்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.