பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மரணம்….. பெற்றோர், சகோதரிக்கு சிகிச்சை….. ஒரு வாரத்திற்கு பின் வெளியான சம்பவம்….!!!!


உணவகத்தில் இருந்து பிரியாணி சாப்பிட்ட சிறுது நேரத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் மாநிலம், லக்டிகாபுல் என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் பிரியாணி சாப்பிட தந்தையும் மகளும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனது. ஆனால் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரியாணியின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சந்தேக மரணம் என்று மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. குடும்பத்தில் இருந்து நால்வரும் பிரியாணி சாப்பிட்டு இரவு வீட்டிற்கு தூங்க சென்ற அவர்கள் மதியம் வரை எழுந்திருக்கவில்லை. அக்கம் பக்கத்தில் கதவை தட்டியபோது குடும்பத்தினர் அனைவரும் மயக்க நிலையில் இருந்துள்ளார். வாலிபரின் தாய் மட்டும் தள்ளாடி வந்து கதவை திறந்து நடந்ததை தெரிவித்துள்ளார். உறங்கச் செல்வதற்கு முன் உணவகத்தில் வாங்கிய பிரியாணியை மட்டுமே சாப்பிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.