செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ், திமுக என்ன முடிவுக்கு வந்துட்டான்னா ? இஸ்லாமிய – கிறிஸ்தவருக்கு நாதி கிடையாது. பிஜேபிக்கு ஒருபோதும் ஓட்டு போறது இல்ல. நமக்கு தான் போட்டாகணும். அவங்க நாதியற்றவர்கள் என்று கருது. அதனால இருக்கிறது இந்துக்கள் ஓட்ட வாங்கணும், அதனால ஐயா ஸ்டாலின் 90 விழுக்காடு என் கட்சியில் இந்து தான், 90% இந்து தான் என பேச வேண்டி வருது.
பிள்ளையார் தெரியலையா உங்களுக்கு ? பெரிய உருவமா தான இருந்தாரு, கண்ணுக்கு தெரியாம போய்ட்டாரா ? எல்லா நாடகம். திடீரென்று தேசியக்கொடி… ஆஹா தேசிய கொடி, வீடு வீடா ஏத்து என சொல்லுறாங்க. அவரே சொல்றாரு… குடியரசு தின உரையில் பிரதமரே சொல்றாரு வீடு இல்லாத, எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் என்று.. அவன் எங்க வீட்ல ஏத்துவான் ?
முதல்ல சுதந்திர கொடிய பிடிக்கிறதுக்கான தகுதி ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு இருக்கா ? நான் தான் இருக்கேன்ல வாங்க ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்போம்.வீர்சாவர்கர் என்றால் வீர சாவர்கர் ஆகிடுவாரா ? அவரு கோழை சாவர்கர். வீரன் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் வீரன், பகத்சிங் வீரன், என் முன்னோர்கள் வீரர்கள், சாவர்கர் தான் உனக்கு பெரிய அடையாளம் என்றால், 3000 கோடியில குஜராத்தில் சிலை வச்சது போல வைக்க வேண்டியதுதானே ?
14 பேர கொலை செஞ்சவனை நீ 15 வருஷம் ஆகிடுச்சுனு விடுதலை செய்ற. அது என்ன சொல்றான்னு பாருங்க ? விடுதலை செய்யனும்னு முடிவெடுத்துட்ட பிறகு, ஒரு குழுவை போட்டு, அவங்கள பரிந்துரைக்க வச்சு… நீதிமன்றம் சொல்லவில்லையே விடுதலை செய்ன்னு. ஆனால் எங்களில் இருக்கிற என் தம்பி பேரறிவாளனுக்கு கொடுத்த தீர்ப்பு, மீதி இருக்கிற ஆறு பேருக்கும் பொருந்தும் என நீதிபதி சொல்றாரு. ஆனா நீ விடுதலை எதிர்க்கிற ? காங்கிரஸோட பிஜேபி அதிகம் கூகுது, கத்துதே ஏன் ? என விமர்சித்தார்.
Post Views:
0