டாஸ்மாக்கில் அலைமோதும் கூட்டம்….. கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை….. அமைச்சர் வேதனை….!!!!


டாஸ்மாக்கில் கூட்டம் அலைமோதும் வேளையில், கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனை தெரிவித்தார்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள வாணி மஹால் பகுதியில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை, பண்பாட்டு துறை சார்பில் நாட்டிய விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் கலந்து கொண்டார். பின்ன செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறியதாவது: “இயற்கையையும், கலையையும் மக்கள் மறந்து விட்டனர்.

நல்ல பண்பாடு மற்றும் ஆன்மீக தன்மையை உருவாக்க கலைகளால் மட்டும்தான் முடியும். மதுபான கடைகளில் கூடும் கூட்டம், மெடிக்கலில் கூடும் கூட்டம், பரதநாட்டிய நிகழ்வில் கூடுவதில்லை என்று வருத்தம் தெரிவித்தார். எத்தனை தடைகள் வந்தாலும் அதை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுப்பார். அதிமுக தற்போது கேப்டன் இல்லாத படகு போன்று இருக்கின்றது. அவர்கள் மற்றவர்களை குறை கூறுவது என்பது உகந்ததாக இருக்காது என்று அவர் தெரிவித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.