இலவு விழுந்த வீடு மாதிரி இருக்கு…! ஒருத்தர் மூஞ்சுலயும் சிரிப்பு இல்ல.. வேதனைப்பட்ட ADMK நிர்வாகி ..!!


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  PWD துறை உங்கள் கையில் இருக்கும், ஹைவேஸ் உங்க கையில இருக்கும், ஹோம் உங்க கையில தான் வச்சிருப்பீங்க. யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க. சீப் மினிஸ்டர் இல்ல,  அவரு. பேசலாமா பதவி வெறியை பற்றி ? இது எந்த பதவி வெறி. ஆட்சியில் இருந்தாலும்,

அதிகாரத்தில் இருந்தாலும் பதவி வெறி. எளிய தொண்டன் கூட பெரிய நிலைமைக்கு வந்துரலாம். ஏதாவது ஒரு தொண்டன சொல்லுங்க சார்.  அண்ணனை வேணா நாங்க சொல்லி  ஒதுங்கிக் கொள்ள சொல்றோம். தங்கமணி, வேலுமணி போய் கெஞ்சினாங்க. அடுத்த கெஞ்சல்  தங்கமணியும், வேலுமணியும் அண்ணா இந்த தடவை இவரு முதல்வர்,  அடுத்த தடவை நீங்க முதல்வர். என் முன்னாடி வந்து  கேளுங்க நடந்ததா ?  இல்லையான்னு ?

ஐயோ வேதனையோட சொல்லுகிறேன். அந்த பொதுச்செயலாளர் பதவி மீண்டும் அடைய துடிக்கின்ற,  நீங்கள் பதவி வெறி பிடித்தவரா ? அல்லது ஓபிஎஸ் அண்ணன் பதவி வெறி  பிடித்தவரா ? பாருங்க இலவு விழுந்த வீடு மாதிரி இருக்கு. ஒருத்தர் மூஞ்சிலுமே சிரிப்பு இருக்கா ? இந்த கட்சி உடைய உடைய யாருக்கு லாபம். அது திமுகவே விரும்பவில்லை. ஒரு தேசிய கட்சி உள்ளே வந்துரும்னு நினைக்கிறாங்க  திராவிட முன்னேற்ற கழகம் என தெரிவித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.