தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் தூய்மை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. இந்த உத்தரவை மீறி மாணவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
தமிழக முழுவதும் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் பள்ளி கல்வித்துறை இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே இனி மாணவர்களை கொண்டு பள்ளிகளை தூய்மை படுத்தாமல் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களை தூய்மை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
The post தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!! appeared first on Seithi Solai.