என்னை மடையன்னு நினைசீங்களா? கோவம் ரொம்ப வருது… பார்த்து நடந்துக்கோங்க.. சீமான் திடீர் எச்சரிக்கை ..!!


செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர் என்றால் பத்திரிக்கையாளராக நடக்க வேண்டும். தினமும் நான் என்ன உங்கள் மண்டை உடைப்போம், மண்டை உடைப்போம் என்று பேசிக் கொண்டிருக்கிறோமா? பத்திரிக்கையாளர் என்றால் அவருக்கு ஒரு பண்பாடு இருக்கிறது.

கேள்வி கேட்கின்ற நீங்கள் அறிவாளி, உக்கார்ந்து  நான் பதில் சொல்கிறவன் அறிவு கெட்ட மடையன் மாதிரி பேசக்கூடாது. நீங்கள் சம்பளத்திற்கு வேலை செய்கிறீர்கள், எல்லாத்தையும் விட்டு கொள்கைக்கு வேலை செய்கிறவர்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்.

எத்தனை ஆண்டு சிறை, எவ்வளவு பிரச்சனை, எவ்வளவு சிக்கல், கேள்வி கேட்பதற்கு ஒரு தன்மை இருக்கிறது, எதைக் கேட்க வேண்டும் என்று இருக்கிறது. பத்திரிக்கையில் சேர்ந்ததினால் நீங்கள் பரமாத்மா கிடையாது தம்பி.. அப்படி கேட்கக் கூடாது, நாகரீகத்தை நாங்கதான் கடைபிடிக்க வேண்டும், நீங்கள் கடைபிடிக்க மாட்டீர்கள் என்று சொல்வதற்கு இல்ல.

தினமும் நான் உங்கள் மண்டை உடைப்பேன் என்று சுத்தியலோடு சுற்றுகிறேனா ? அப்படி இல்லைல. எல்லா பத்திரிக்கையாளர்களிடம் அப்படி பேச வேண்டியது வந்ததா? பார்த்து நடந்து கொள்ளுங்கள் என செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

The post என்னை மடையன்னு நினைசீங்களா? கோவம் ரொம்ப வருது… பார்த்து நடந்துக்கோங்க.. சீமான் திடீர் எச்சரிக்கை ..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.