தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,100 கோடி பாக்கி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு மின்சாரம் வாங்க தடை விதித்துள்ளதால் மின்தடை ஏற்பட்டுவிடும் என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்
The post தமிழக மக்களே….! மின்தடை குறித்து….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!! appeared first on Seithi Solai.