மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையூர் தெற்கு தெருவில் முத்தையா(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாகாடு என்ற இடத்தில் சென்ற போது எதுமலை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தையாவின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மோட்டார் சைக்கிள்- பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த விவசாயி… கோர விபத்து…!! appeared first on Seithi Solai.