தலைவலியா ? காய்ச்சலா… முதல்ல இதை கேட்கணும்… இல்ல நோயாளி செத்துடுவாரு… அரசுக்கு பாடம் எடுத்த சீமான்…!!


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பெரியார் ஜாதியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது என எதிர்கின்றார். நீங்கள் ஜாதிவாரி கணக்கெடுக்கு எடுக்க சொல்லுறீங்க என்ற கேள்விக்கு, நீங்கள் பெரியாரை எந்த அளவிற்கு புரிந்து கொண்டீர்கள். பெரியார் என்ன சொல்கிறார் என்றால், ஒருவன் தான் பிறந்த குடிக்கு அவன் எண்ணிக்கைக்கு ஏற்ப அவனுடைய விகிதாச்சாரத்தை பெறாதவன் மானம் இழந்த குடிகள் என்கிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்.

மானம், அறிவு, வீரம் இதை கொண்ட ஒரு இனத்தின் மகன் பிறிதோறு இனத்தான், வஞ்சக அறிவால் தனக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுக் கொண்டான் என்றால், அதை தெரிந்து கொண்டு இருப்பவன் ஏமாளி, அவன் மானம் இழந்தவன் என்று பெரியார் தான் சொல்கிறார். ஜாதியில் ஏற்ற தாழ்வு இருக்கா இல்லையா ? பெருவாரியான ஜாதி என அங்கீகரிக்கப்படும் போது எப்படி மோதல் வரும் ?

ஜாதி ரீதியான கணக்கெடுப்பில் என்ன இருக்கிறது என்றே தெரியாமல் நீங்கள் மூடி வைத்துக் கொண்டு வண்டி ஓட்டலாம் என்கிறீர்கள். இப்போது நான் கேட்பது..  நீங்கள் இதுவரை ஜாதி கணக்கெடுப்பை எண்ணி சொல்லவில்லை. இப்போது சாதி மோதல் இருக்கிறதா ? இல்லையா ? குடி பெருமைக்காக கொலை நடக்கிறதா ? இல்லையா? ஜாதிய படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இது சாதிகளை ஒழிப்பதற்கான முயற்சிதான்.

ஒரு நோயாளி வருகிறார் என்றால், முதலில் என்ன செய்கிறது என்று கேட்க வேண்டும் ? தலைவலியா ? காய்ச்சலா என கேட்கணும். தலைவலிக்கும் , வயிற்றுவலிக்கும், வாந்தி பேதிக்கும் ஒரே மாத்திரை என்று கொடுத்தால், நோயாளி செத்துப் போயிடுவார்கள். இப்போது என்னவென்று கேட்கிறதே, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு தான் என விளக்கம் அளித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.