5 தடவை கலைஞர் C.M ..! திராவிடன் மாடல்ன்னு பேசுறீங்க… சமநீதி, சமூக நீதி கேட்ட BJP ..!!


செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  இந்தியாவிலேயே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மேடைக்கு மேடை பேசும்போது, திராவிடன் மாடல் என்று சொல்கிறார், சமூக நீதி அரசு என்று சொல்கிறார்கள். இதே கட்சி திமுக ஐந்து முறை ஆட்சியில் இருந்திருக்கிறார்கள், கலைஞர் கருணாநிதி அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். சுய பரிசோதனை செய்ய வேண்டும்..

ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் 70 ஆண்டு காலம் கட்சி நடத்தி, 24 மாவட்டத்தில் 386 ஊராட்சியில் இந்த நிலைமை என்றால், இன்றைக்கு நாம் சுதந்திர தினத்திற்கு செய்துவிடலாம். 100 காவல் துறை நண்பர்களை நிற்க வைத்து கொடியை ஏற்ற வைத்துவிடலாம். அது முக்கியம் கிடையாது. ஆனால் இந்த எண்ணமே ஏன் வருகிறது ?

தீண்டாமை சுவர் ஏன் வருகிறது ? இதற்கான முயற்சியும் முதலமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும். இது மிக மிக முக்கியமானது. அதுவும் மக்கள் பிரதிநிதிக்கு மரியாதை இல்லை என்றால்,  பட்டியல் இன சமுதாய மக்களுக்கு,  சாதாரண மக்களுக்கு எப்பொழுது சமநீதியும், சமூக நீதியும் கிடைக்கும் ?  அதுவும் எங்களுடைய குற்றச்சாட்டாக இருக்கிறது என தெரிவித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.