தமிழகம் முழுவதும் நாளை(ஆகஸ்ட் 20)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்……!!!


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 20) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம்:

விருதுநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.20) மின்தடை செய்யப்பட உள்ளது.

விருதுநகா் பழைய பேருந்து நிலையப் பகுதி, மேலரத வீதி, பாத்திமா நகா், முத்துராமலிங்க நகா், இந்திரா நகா், பாண்டியன் காலனி மற்றும் புகா் பகுதிகளான குல்லூா்சந்தை, பெரிய வள்ளிக்குளம், ஆா்.எஸ். நகா், அல்லம்பட்டி, லட்சுமி நகா், என்.ஜி.ஓ. காலனி, வேலுச்சாமி நகா், கருப்பசாமி நகா், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூா், சத்திரரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகா், கே.கே.எஸ்.எஸ்.என். நகா், பேராலி சாலை பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை (ஆக. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சி. ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவகோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

எனவே, தேவகோட்டை நகா், உதையாச்சி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூா், வேப்பங்குளம், நானாகுடி, திருமணவயல், அனுமந்தங்குடி, பனங்குளம், ஊரணிக்கோட்டை, கண்டதேவி, புளியால், உஞ்சனை, ஆறாவயல் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்:

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: வாணியம்பாடி நியுடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரிமலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூா், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூா், குருமதெரு, பெத்தவேப்பம்பட்டு, சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூா், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகள்.

நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, புத்துகோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூா், கேத்தாண்டபட்டி, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், கத்தாரி, பச்சூா், கொத்தூா், காந்திநகா், சுண்டம்பட்டி, தோல்கேட், பழையபேட்டை.

ஆலங்காயம்:

ஆலங்காயம், காவலூா், பூங்குளம், வெள்ளக்குட்டை, கொா்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூா், ராஜாபாளையம், பெத்தூா், ஆா்எம்எஸ்புதூா், நாயக்கனூா், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம் சுற்றியுள்ள பகுதிகள்.

தென்காசி மாவட்டம்:

சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்தில் 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிக்குளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின்தடை செய்யப்படுகிறது என்று நெல்லை கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்து உள்ளார்.

நெல்லை மாவட்டம்:

பாளை மற்றும் மேலப்பாளையம் துணைமின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்தடை ஏற்படும் இடங்கள்

மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம். பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர்,

மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம்,

கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், திம்மராஜபுரம். சமாதானபுரம், கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலக்கல்லூர்

இதேபோல் மேலக்கல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளன்குளத்தில் மின்வினியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்:

திருவள்ளுரை அடுத்த கடம்பத்தூர் துணை மின்நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் சனிக்கிழமை மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடம்பத்தூர், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், திருப்பாச்சூர், கைவண்டூர், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், சின்னம்மாபேட்டை, அகரம், வெண்மனம்புதுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று திருமழிசை மின்சார வாரிய செயற்பொறியாளர் கணபதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணைமின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் நாளை மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காக்களூர் சிட்கோ, ஆஞ்சநேயபுரம், நரசிங்கபுரம், திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர், பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம், பென்னலூர் பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று திருவள்ளூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம்:

துவாக்குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் சாரம் பெறும் பகுதிகளான நேரு நகர், அண்ணா வளைவு, ஏ ஓ எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன்மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப், சி ஏ இ ஆர் மற்றும் பி எச் செட்டர், தேசிய தொழில்நுட்பகழகம் துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழில்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா காலனி, தேவராயனேரி பொய்கை குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

The post தமிழகம் முழுவதும் நாளை(ஆகஸ்ட் 20)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்……!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.