இலங்கை நாட்டில் வடக்கு மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின்சக்தி அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டில் வடக்கு மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின்சக்தி அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ” புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க இலங்கை மின்சார வாரியம் மற்றும் நிலைத்த மேம்பாட்டுக்கான ஆணையத்தின் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை அன்று சந்தித்தேன்.
500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டில், மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் என இரு காற்றாலை மின் திட்டங்களை அமைக்க, அதானி பசுமை ஆற்றல் நிறுவனத்துக்கு தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், இந்தியாவை சேர்ந்த அதானி குழுமத்திற்கு காற்றாலை மின் திட்டங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறித்து முதல்முறையாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Post Views:
0