இங்க தான் கரைக்கணும்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. கலெக்டர் தகவல்….!!


நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நிர்வாகம் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டுமென கலெக்டர் குமரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகின்றது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது.

இதில் நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருவதால் அதை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களை உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும் எனவும், ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாடுமாறும், கூடுதல் விவரங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் கலெக்டர் ஆகியோரை அணுகலாம் என கூறப்பட்டிருந்தது.

The post இங்க தான் கரைக்கணும்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. கலெக்டர் தகவல்….!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.