சாலையில் நடந்து சென்ற இளம் பெண்…. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!


பீகார் மாநிலத்தில் பாட்னாவில் உள்ள சிபாரா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளம் பெண்ணை சுட்டுவிட்டு தப்பி சென்றார். அதனால் காயமடைந்த அந்த மாணவி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரம், இளம் பெண் சுடப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பட்டப் பகலில் அதுவும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணை இளைஞர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.